தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரிபுரா மாநிலத்தில் தெற்கு திரிபுரா மாவட்டம், அதையொட்டிய பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் தரத்தை ட்ராய் ஆய்வு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUL 2026 2:56PM by PIB Chennai

திரிபுரா மாநிலம் தெற்கு திரிபுரா மாவட்டம், அதையொட்டிய பகுதிகளில் பொது தொலைத்தொடர்பு நுகர்வோர்களின் தகவலுக்காக 2026 மே மாதத்தில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) மொபைல் நெட்வொர்க் தரத்தை ஆய்வு செய்தது.

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் மொபைல் நெட்வொர்க் சேவைகளின் (குரல் மற்றும் தரவு) நிகழ்நேரத் தரத்தை மதிப்பீடு செய்யவும், சரிபார்க்கவும் இச்சோதனை நடத்தப்பட்டது. நகரப்பகுதிகளில் 244.2 கிலோ மீட்டர் தொலைவிற்கும், 9 முக்கிய இடங்களிலும், நடைபயணமாக 1.6 கிலோ மீட்டர் தொலைவிற்கும் இச்சோதனை 2026 மே 13 முதல் மே 16 வரை நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலக மேற்பார்வையின் கீழ் இச்சோதனை நடத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288263&reg=3&lang=1

***

SS/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2288683) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali-TR