பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 350 கிலோ உந்துவிசை கொண்ட முதல் எடை குறைந்த ஜெட் இயந்திரம்

प्रविष्टि तिथि: 23 JUL 2026 8:19PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வின் எரிவாயு விசையாழி ஆராய்ச்சி நிறுவனம் (GTRE) வடிவமைத்த, 350 கிலோ உந்துவிசை திறன் கொண்ட இந்தியாவின் முதல் சிறிய, எடை குறைந்த ஜெட் இயந்திரம் (Expendable Turbo Jet) வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தைத் தயாரித்து ஒருங்கிணைக்கும் பணிக்காக, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆசாத் இன்ஜினியரிங் நிறுவனம் தொழில் பங்காளராக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜூலை 22, 2026 அன்று, இந்த  நிறுவனம் இயந்திரத்தை வெற்றிகரமாகத் தயாரித்து ஜிடிஆர்இயிடம் ஒப்படைத்தது.  இது இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். துல்லியமான பொறியியல், மேம்பட்ட உற்பத்தி மற்றும் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்சார் சமூகங்களுக்கு இடையிலான நெருக்கமான கூட்டு முயற்சி ஆகியவற்றின் பல ஆண்டுகால உழைப்பின் உச்சகட்டமாக இந்த விநியோகம் அமைந்துள்ளது.

 

ஆசாத் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு ராகேஷ் சோப்தார், அந்த இயந்திரத்தை விஞ்ஞானியும் வான்வழி அமைப்புகள் பிரிவின் தலைமை இயக்குநருமான டாக்டர் கே. ராஜலட்சுமி மேனன் மற்றும் ஜிடிஆர்இ-யின் இயக்குநர் டாக்டர் எஸ்.வி. ரமணமூர்த்தி ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

 

பாதுகாப்புச் செயலாளரும், டிஆர்டிஓவின் செயலாளரும்,  தலைவருமான திரு ராஜேஷ் குமார் சிங், இந்த தொலைநோக்குப் பார்வையை ஒரு வரலாற்று மைல்கல்லாக மாற்றுவதில் முக்கியப் பங்காற்றிய ஜிடிஆர்இ மற்றும் தொழில்துறையின் கூட்டுமுயற்சியைப் பாராட்டினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288576&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2288667) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Telugu , Gujarati , English , Urdu , Manipuri