கூட்டுறவு அமைச்சகம்
மகாராஷ்டிராவில் 'பாரத் டாக்ஸி' சேவை தொடக்கம்
प्रविष्टि तिथि:
23 JUL 2026 5:53PM by PIB Chennai
கூட்டுறவு மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையை மாற்றுவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹோல் ஆகியோர் இன்று (23.07.2026) நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மகாராஷ்டிராவில் 'பாரத் டாக்ஸி' சேவையைத் தொடங்கி வைத்தனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் கூட்டுறவின் மூலம் வளம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள், கூட்டுறவுத் துறை பிரதிநிதிகள், அதிகாரிகள், பாரத் டாக்ஸியுடன் தொடர்புடைய ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹோல், மகாராஷ்டிராவில் 'பாரத் டாக்ஸி' தொடங்கப்பட்டது, மாநிலத்தின் கூட்டுறவுத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்றார். மகாராஷ்டிரா கூட்டுறவின் புனித பூமி என்றும், 100 ஆண்டுகளுக்கும் மேலான வளமான கூட்டுறவு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். நாடு முழுவதும் செயல்படும் 8.60 லட்சத்திற்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்களில், ஏறக்குறைய 2.5 லட்சம் சங்கங்கள் மகாராஷ்டிராவில் மட்டுமே செயல்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டின் முதல் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆகியோரின் தலைமையில் கூட்டுறவுத் துறையில் ஏற்பட்ட புதிய புரட்சியின் தாக்கம் தற்போது மகாராஷ்டிராவின் போக்குவரத்துத் துறையிலும் தெரிகிறது என்றார். தில்லி, குஜராத்திற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் பாரத் டாக்ஸி தொடங்கப்படுவது, கூட்டுறவு மூலம் வேலைவாய்ப்பு, செழிப்பு என்ற புதிய மாதிரியை மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288421®=3&lang=1
(Release ID : 2288421)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2288608)
आगंतुक पटल : 7