ரெயில்வே அமைச்சகம்
சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சிறந்த சேவைகளை வழங்குவதில் ரயில்வே கவனம் செலுத்துகிறது
प्रविष्टि तिथि:
23 JUL 2026 5:16PM by PIB Chennai
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் (சேர் கார் & ஸ்லீப்பர்), அம்ரித் பாரத், நமோ பாரத் ரயில்கள், நவீன பெட்டிகள், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட பயணிகள் வசதிகள் ஆகியவை ரயில் பயண அனுபவத்தை மேம்படுத்துகின்றன.
72 அம்ரித் பாரத் ரயில் சேவைகள், நாடு முழுவதும் உள்ள குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு மலிவு விலையில் நீண்ட தூர இணைப்பை வழங்குகின்றன.
162 வந்தே பாரத் (சேர் கார்), 2 வந்தே பாரத் (ஸ்லீப்பர்) ரயில் சேவைகள், வேகமான, வசதியான, நவீன ரயில் பயணத்தின் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகின்றன.
கவச், சிசிடிவி கண்காணிப்பு, அதிர்வு இல்லாத இணைப்பான்கள், தீ கண்டறிதல், தீ அணைக்கும் அமைப்புகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வசதிகள் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளும் பயணிகள் சார்ந்த அம்சங்களும், ரயில்வே பயண அனுபவத்தை மேம்படுத்துகின்றன.
இந்திய ரயில்வே அனைத்துப் பிரிவினருக்கும் மலிவான, நல்ல தரமான சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேற்று (22.07.2024 புதன்கிழமை) பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288381®=3&lang=1
(Release ID : 2288381)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2288605)
आगंतुक पटल : 10