கலாசாரத்துறை அமைச்சகம்
வெளிநாடுகளில் இந்திய கலாச்சாரத்தை பிரபலப்படுத்த மத்திய கலாச்சார அமைச்சகத்தின் நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
23 JUL 2026 3:50PM by PIB Chennai
கலாச்சார ஒப்பந்தங்கள், கலாச்சார பரிமாற்றத் திட்டங்கள், கலாச்சார ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இதர இருதரப்பு கலாச்சார ஏற்பாடுகள் ஆகியவற்றின் மூலம் வெளிநாடுகளுடன் மத்திய கலாச்சார அமைச்சகம் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. அத்துடன் ஜி20, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, சார்க் மற்றும் இதர சர்வதேச தளங்கள் உட்பட பலதரப்பட்ட கலாச்சார அமைப்புகளில் இந்தியாவின் பங்களிப்பை ஒருங்கிணைக்கிறது.
இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட கலாச்சார மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இந்திய திருவிழாக்களை நடத்துவதற்கு உலகளாவிய பங்கேற்பு திட்டத்தை அமைச்சகம் நிர்வகிக்கிறது. வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் இந்திய கலை, கலாச்சாரம், கலாச்சார பரிமாற்றங்களை ஊக்குவிக்க இந்தோ-வெளிநாட்டு நட்புறவு கலாச்சார சங்கங்களுக்கு நிதியுதவியையும் அளிக்கிறது.
உலகளாவிய பங்கேற்பு திட்டம் திருத்தியமைக்கப்பட்டு ரூ.299.94 கோடிu ஒதுக்கீட்டுடன் 2026-27–ம் நிதியாண்டு முதல் 2030-31-ம் ஆண்டு வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், இந்திய கலாச்சார உறவுகள் குழுமம் இந்திய தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள கலாச்சார மையங்களின் கட்டமைப்பு மூலம் உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இத்தகவலை மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288285®=3&lang=1
****
TV/IR/SM/SH
(रिलीज़ आईडी: 2288462)
आगंतुक पटल : 11