மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வளத் துறையில் பெண்களால் வழிநடத்தப்படும் கூட்டுறவுச் சங்கங்கள்
प्रविष्टि तिथि:
22 JUL 2026 1:32PM by PIB Chennai
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறை, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் மீன்வளத் திட்டத்தின் மூலம், ஆந்திரப் பிரதேசம் உட்பட நாடு முழுவதும் மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்களை அமைப்பதற்கு ஆதரவளித்து வருகிறது. 2021 ஏப்ரல் 1 முதல் 2026 ஜூன் 15 வரையிலான காலத்தில், காக்கிநாடா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மீன்வளம், கடல்பாசி வளர்ப்பு மற்றும் கடல்சார் பொருட்கள் பதனப்படுத்துதல் ஆகிய துறைகளில் பெண்களால் வழிநடத்தப்படும் மொத்தம் 213 கடலோரக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 27,447 பயனாளிகள் பயனடைந்துள்ளதாகவும் ஆந்திரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
'நீலப் பொருளாதாரம்' திட்டத்தின் ஒரு பகுதியாக, மீன்வளத் துறை, 'தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம்' மூலம், நாடு முழுவதும் 12,000 மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்களை அமைப்பதற்கான செயல் திட்டத்தை வகுத்துள்ளது. இதில் இதுவரை கூட்டுறவுச் சங்கங்கள் இல்லாத பஞ்சாயத்துகள், கிராமங்களில் பெண்களால் வழிநடத்தப்படும் கடலோரக் கூட்டுறவுச் சங்கங்களை அமைப்பதும் அடங்கும்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287589®=3&lang=1
***
SS/PKV/SH
(रिलीज़ आईडी: 2288097)
आगंतुक पटल : 7