மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழகத்தின் கடல் உணவு ஏற்றுமதி மதிப்பு கடந்த நிதியாண்டில் ரூ.7660 கோடியாக அதிகரிப்பு

प्रविष्टि तिथि: 22 JUL 2026 1:30PM by PIB Chennai

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய மீன்வளத்துறை கடல் உணவு ஏற்றுமதியை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கென மீன்வளம், மீன்வளர்ப்பில் மேம்பாட்டுத்  திட்டங்களுக்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்  மொத்தம் ரூ.21,394.88 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.9,510.89 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இவை தவிர, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் மூலமாகவும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிதியத்தின் கீழ், மீன் பதனப்படுத்தும் ஆலைகளை விரிவுபடுத்துவதற்கும் நவீன மயமாக்குவதற்கும் ரூ.345.89 கோடி மதிப்பீட்டில் 18 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஆகியவற்றின் கீழ், வழங்கப்பட்டுள்ள நிதி உதவிகள் குறித்த ஆண்டுவாரியான, மாநிலவாரியான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 2025-2026-ம் நிதியாண்டில் ரூ.7,660.48 கோடி மதிப்பில் 1,52,144 டன்  கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு கடந்த 2025-2026-ம் நிதியாண்டில்  மத்திய அரசு ரூ.1236.21 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.474.99 கோடியும் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.223.02 கோடியும் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287587&reg=3&lang=1

 

***

SS/SV/PS/SH

 


(रिलीज़ आईडी: 2288095) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी