உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 22 JUL 2026 3:59PM by PIB Chennai

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அமல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்த அறிவிக்கைகள் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான டிஜிட்டல் பயன்பாடுகள் குறித்தும், திறன் மேம்பாடு குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பிரதிநிதிகளுக்கும்  காவல் துறையினருக்கும் இந்தச் சட்டங்கள் குறித்த உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  கூடுதலாக காவல் ஆராய்ச்சி மேம்பாட்டு வாரியம், திறன் மேம்பாடு, பயிற்சிக்கான இணையவழிக் கருத்தரங்குகளை நடத்தியது. இதில் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

இந்தச் சட்டம் அமலுக்கு வந்த 2024-லிருந்து காவல், ஆராய்ச்சி   மேம்பாட்டு வாரியம் இதுவரை 83,740 அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது.

மேலும் 110 டிஜிட்டல் கற்றல் பாடநெறிகளும், ஐஜிஓடி கர்மயோகி இணையதளம் வாயிலாக பயிற்சி அளிப்பதுடன் புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பான 76 பாட நெறிகளிலும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287679&reg=3&lang=1

****

TV/SV/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2287927) வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese