ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் சார்ந்த மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசின் திட்டங்கள்

प्रविष्टि तिथि: 21 JUL 2026 3:58PM by PIB Chennai

இந்தியாவை பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவின் உலகளாவிய மையமாக மாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வெளிநாட்டினர் இந்தியாவில் ஆயுஷ் சிகிச்சை பெற 'ஆயுஷ் விசா' (M-3) மற்றும் 'ஆயுஷ் உதவியாளர் விசா' (M-4) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 'ஆயுஷ் குவாலிட்டி மார்க்' மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்கான தரப்படுத்தப்பட்ட சிகிச்சை வழிகாட்டுதல்கள் (STGs) செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, சர்வதேச கூட்டு ஒப்பந்தங்கள் (MoUs) மற்றும் ஆயுர்வேத பயிற்சி அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் மூலம் சர்வதேச அளவில் ஆயுஷ் மருத்துவ முறை பரப்பப்படுகிறது.

ஆயுஷ் மருத்துவச் சுற்றுலாவை (Medical Value Travel) தென்னிந்திய அளவில் பிரபலப்படுத்த, மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தென்மண்டல மாநாடு 2025 மே 26 அன்று சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

தமிழகத்திற்கு வருகை தரும் சர்வதேச நோயாளிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சித்த மருத்துவம் மற்றும் யோகா சிகிச்சை பெற இத்திட்டங்கள் உறுதுணையாக உள்ளன.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287033&reg=3&lang=1

****

TV/NB/SH


(रिलीज़ आईडी: 2287506) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu