கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் தனியார்மயமாக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் விளக்கம்

प्रविष्टि तिथि: 21 JUL 2026 2:23PM by PIB Chennai

தமிழ்நாட்டில் உள்ள சென்னை துறைமுகம்காமராஜர் துறைமுகம்வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்ளிட்ட நாட்டின் 12 முக்கியத் துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றனகாமராஜர் துறைமுகம் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தாலும்மற்ற 11 துறைமுகங்களும் 2021-ம் ஆண்டின் முக்கிய துறைமுக பொறுப்புக் கழகச் சட்டத்தின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றனகடந்த பத்தாண்டு காலத்தில் பொது-தனியார் பங்களிப்பு முறையில் துறைமுக முனையங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும்எந்தவொரு முக்கியத் துறைமுகமும் தனியார்மயமாக்கப்படவில்லைதுறைமுகம் அமைந்துள்ள நிலம்முக்கியச் சொத்துக்களின் உரிமைகள் அனைத்தும் தொடர்ந்து மத்திய அரசிடமே உள்ளன.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த மத்திய துறைமுகங்கள்கப்பல் போக்குவரத்துநீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால்பொது-தனியார் பங்களிப்பு திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டில் காமராஜர் துறைமுகத்தில் இரும்புத் தாது முனையமும்வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8, 9-வது தளங்கள்நிலக்கரி தளம்-ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 2025-26-ம் நிதியாண்டில் சென்னை துறைமுகம் 1,516.47 கோடி ரூபாயும்காமராஜர் துறைமுகம் 1,272.13 கோடி ரூபாயும்வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 1,254.96 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டியுள்ளனவெளிப்படைத்தன்மையுடன் கூடிய போட்டி ஏலத்தின் மூலம் தனியார் முதலீடுகளை ஈர்த்து துறைமுகங்களின் சேவைத் திறனை அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286968&reg=3&lang=1

 

***

SS/PD/SH

 


(रिलीज़ आईडी: 2287432) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali