மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் (முதன்மை) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேர்முகத் தேர்வில் பங்கேற்குமாறு யுபிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது

प्रविष्टि तिथि: 21 JUL 2026 11:29AM by PIB Chennai

மத்திய குடிமை பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2026 ஜூன் 20,21 ஆகிய தேதிகளில் நடத்திய ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் (முதன்மை) தேர்வு 2026–ன் எழுத்துத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தகுதியுடைவர்களை நேர்முக தேர்வுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் போது வயது, கல்வித்தகுதிகள், சாதி, மாற்றுத்திறனாளி, பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர் உள்ளிட்டவற்றிற்கான அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். எனவே இந்த சான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்முகத்தேர்வில் பங்கேற்பவர்கள் தங்களது கல்வித்தகுதியை  https://upsconline.nic.in   என்ற இணையதளத்தில் புதுப்பிக்க உரிய அவகாசம் அளிக்கப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த போது உரிய கல்வித் தகுதியை பெற்றிராதவர்கள் தங்களுடைய விவரங்களை புதுப்பிக்குமாறும் பொது விண்ணப்பப் படிவத்தில் தேவையான தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதை செய்ய தவறுவோர் நேர்முக தேர்விற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தகுதியுடைய விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் விவரங்களை 3-9-2025 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் தேர்வு 2026-ன் விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள விதிமுறைகளை கவனமுடன் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286904&reg=3&lang=1

***

SS/IR/SM/SH


(रिलीज़ आईडी: 2287376) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati