மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

கொங்கணி உள்ளிட்ட இந்திய மொழிகளில் செயற்கை நுண்ணறிவு சேவை: பாஷினி ராஜ்யம் பயிலரங்கு கோவாவில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 21 JUL 2026 11:28AM by PIB Chennai

மத்திய மின்னணுதகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவுகோவா அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து பனாஜியில் 'பாஷினி ராஜ்யம்மாநிலத் அளவிலான பயிலரங்கை நடத்தியதுகொங்கணி உள்ளிட்ட இந்திய மொழிகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பன்மொழி பொது டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதுகோவா மாநில முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த்தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு ரோஹன் கௌண்டே உட்பட மூத்த நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

மொழி தடை இன்றி பொதுமக்கள் அனைவரும் தங்களின் சொந்த மொழியிலேயே அரசு சேவைகள், தகவல்களைப் பெற இந்த தொழில்நுட்பம் வழிவகை செய்கிறது. இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு, எழுத்து-உரை மாற்றம் போன்ற சேவைகளை வழங்கும் பாஷினி தளம், தற்போது 36 இந்திய எழுத்து மொழிகளிலும், 23 குரல் மொழிகளிலும் சேவை வழங்கி வருகிறது. இத்தளம் 800-க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்களை இணைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286903&reg=3&lang=1

 

***

SS/PD/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2287367) வருகையாளர் எண்ணிக்கை : 38
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu