புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
புள்ளியியல் அமைப்பை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை தேசிய புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது
प्रविष्टि तिथि:
20 JUL 2026 3:19PM by PIB Chennai
மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய புள்ளியியல் அலுவலகம், டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் அதிகாரப்பூர்வ புள்ளியியல் அமைப்பை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.
டிஜிட்டல் அடிப்படையிலான செயல்முறைகளுக்கான சரிபார்ப்பு சோதனைகளைக் கொண்ட கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் கணக்கெடுப்புகளில், தரவுகளைச் சேகரிப்பதற்காக, கணினி உதவியுடன் நேரடி நேர்காணல் நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
மையப்படுத்தப்பட்ட சேவையகங்கள், நிகழ்நேர கண்காணிப்பு தகவல்பலகைகள், கணக்கெடுக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிபிஎஸ் குறியிடுதல், தரவுகளின் பாதுகாப்பான மின்னணு பரிமாற்றம் போன்ற நடவடிக்கைகள் மூலம், கணக்கெடுப்பு தொடர்பான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாதிரித் தேர்வு, களக் கண்காணிப்பு, கணக்கெடுப்பு நிர்வாகம், சரிபார்ப்பு, தரவு செயலாக்கம் உள்ளிட்ட கணக்கெடுப்பு செயல்முறையின் பல்வேறு நிலைகளும் தானியங்கி முறையில் மாற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள், தரவு சேகரிக்கும் இடத்திலேயே சரிபார்ப்பைச் சாத்தியமாக்குவதன் மூலம், தரவின் தர நிலையை மேம்படுத்தியுள்ளன. தரவு செயலாக்கத்திற்குத் தேவைப்படும் நேரத்தை இது வெகுவாகக் குறைத்துள்ளதுடன், கணக்கெடுப்பு சார்ந்த முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கும் வழிவகுத்துள்ளன. புள்ளியியல் தொடர்பான செயல்பாடுகளில், நிர்வாகப் பதிவுகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், கணக்கெடுப்பு பணிகளுக்கானத் திட்டமிடல், கண்காணிப்பு நடைமுறைகளை வலுப்படுத்த, சாத்தியமான இடங்களில், புவிசார் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286549®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2286877)
आगंतुक पटल : 10