திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
இந்தியத் திறன் மேம்பாட்டு இயக்கம்
प्रविष्टि तिथि:
20 JUL 2026 4:14PM by PIB Chennai
இந்தியத் திறன் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, மறுதிறன் பயிற்சி, மேம்பட்ட திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இப்பணிகள் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், மக்கள் கல்வி நிறுவனம் (ஜன் சிக்ஷன் சன்ஸ்தான்), தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம், தொழிற்பயிற்சிக்கான கல்வி நிறுவனங்கள் வாயிலாகச் செயல்படுத்தப்படும் கைவினைஞர் பயிற்சித் திட்டம் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
தொழில்துறைக்குத் தேவையான திறன்களுடன் இந்திய இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். இந்தியத் திறன் மேம்பாட்டு இயக்கத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ், பயிற்சி பெற்ற அல்லது பதிவு செய்த விண்ணப்பதாரர்களின் மாநில வாரியான விவரங்கள் தனியாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்களில், 2015-16-ம் ஆண்டு முதல் 2021-22-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்ட பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் மூன்று பதிப்புகளில் மட்டும், குறுகிய காலப் பயிற்சிப் பிரிவின் கீழ், வேலைவாய்ப்பு விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வந்தன.
இத்திட்டத்தின் முதல் மூன்று பதிப்புகளின் (1.0 முதல் 3.0 வரை) கீழ், வேலைவாய்ப்பு பெற்ற விண்ணப்பதாரர்களின் மாநில வாரியான விவரங்கள் இணைப்பு-II-ல் உள்ளன. குறுகிய காலப் பயிற்சியின் கீழ், சான்றிதழ் பெற்ற 56.89 லட்சம் விண்ணப்பதாரர்களில், 24.3 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வேலைவாய்ப்பு விகிதம் 42.8% ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286581®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2286872)
आगंतुक पटल : 10