எரிசக்தி அமைச்சகம்
அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி கையிருப்பு
प्रविष्टि तिथि:
20 JUL 2026 3:44PM by PIB Chennai
நாட்டின் நிலக்கரி (லிக்னைட் உட்பட) சார்ந்த மின் உற்பத்தித் திறன் 230.8 ஜிகாவாட் ஆகா உள்ளது. 2026 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில், விநியோகிக்கப்பட்ட மொத்த மின்சாரத்தில், நிலக்கரியின் பங்கு 69.54% ஆகும். மேலும், சூரியசக்தி பயன்பாட்டில் இல்லாத உச்சக்கட்டத் தேவை ஏற்படும் நேரங்களில், இத்தகைய மின் நிலையங்களிலிருந்து பெறப்பட்ட அதிகபட்ச உற்பத்தி 188.8 ஜிகாவாட் (இது மொத்த உற்பத்தியான 251.4 ஜிகாவாட்டில் 75 சதவீதம்) ஆகும்.
12.07.2026 அன்றைய நிலவரப்படி, நாட்டில் உள்ள அனல் மின் உற்பத்தி நிலையங்களில், 42.8 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. இது 85% உற்பத்தி ஆலைகளின் 14 நாட்களுக்கான மின் உற்பத்திக்குத் தேவையான அளவாகும். மேலும், தற்போதைய அன்றாட உற்பத்திக்கானத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நிலக்கரியும், அனல் மின் நிலையங்களுக்குக் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு மாதங்களுக்கான மின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான பராமரிப்புப் பணிகள் முன்கூட்டியே திட்டமிடப்படுகின்றன. உச்சக்கட்டத் தேவை நிலவும் மாதங்களில், இத்தகைய பராமரிப்புப் பணிகளைக் குறைப்பது, ஒரு வழக்கமான நடைமுறையாகும். மின் தேவை அதிகரிப்பு காரணமாக, மின்சாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, மின் உற்பத்தி நிலையத்தின் தொழில்நுட்பக் காரணிகளின் அடிப்படையில், பராமரிப்புப் பணிகளை ஒத்திவைக்கும் நடைமுறைகளை மத்திய மின்சார ஆணையம் கண்காணித்து அதற்கான அனுமதியையும் வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286557®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2286836)
आगंतुक पटल : 9