தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் ஆய்வு செய்தது

प्रविष्टि तिथि: 20 JUL 2026 3:34PM by PIB Chennai

மும்பையில் மொபைல் நெட்வொர்க் தரத்தை 2026 ஜூன் மாதத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்தது. இச்சோதனை நகரங்கள், முக்கியப் பகுதிகள், பொதுப் போக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி நெட்வொர்க்குகளின் செயல்பாட்டுத் தரம் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பல்வேறு மேம்பட்ட கைபேசிகள் பயன்படுத்தப்பட்டது.

நகரப்பகுதியில் 204.3 கிலோ மீட்டர் அளவிற்கும், மும்பையில் 7 முக்கிய இடங்களிலும் 2026 ஜூன் 10 முதல் ஜூன் 12 வரை இச்சோதனை நடத்தப்பட்டது. பெங்களூருவில் உள்ள டிராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இதுகுறித்த தகவல்களை www.trai.gov.in  என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286535&reg=3&lang=1

***

SS/IR/LDN/RJ


(रिलीज़ आईडी: 2286804) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi