திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்க்கை மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி

प्रविष्टि तिथि: 20 JUL 2026 4:16PM by PIB Chennai

தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவ்த்த அவர், மாநில அளவிலான சேர்க்கை விவரங்களின்படி, தமிழ்நாட்டில் 2021-22-ம் நிதியாண்டில் 49,929 தொழில் பழகுநர்களும், 2022-23-ல் 72,311 நபர்களும் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 2023-24-ல் 1,01,553 ஆகவும், 2024-25-ல் 1,01,788 ஆகவும் இருந்த இச்சேர்க்கை எண்ணிக்கை, 2025-26-ம் நிதியாண்டில் 1,43,236 ஆக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 2026 ஜூன் 30-ம் தேதி வரையிலான தரவுகளின்படி தமிழ்நாட்டில் மேலும் 33,145 இளைஞர்கள் இந்தத் தொழில் பழகுநர் பயிற்சியில் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தொழில் பழகுநர் பயிற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 2016 ஆகஸ்ட் மாதம் தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டம் 2022-23-ம் நிதியாண்டு முதல் இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286582&reg=3&lang=1  

***

TV/PD/RJ


(रिलीज़ आईडी: 2286788) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR