தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்தில் சேவைகளுக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் மொபைல் சேவைகளின் தரத்தை ட்ராய் ஆய்வு செய்தது

प्रविष्टि तिथि: 20 JUL 2026 4:11PM by PIB Chennai

பொது வாடிக்கையாளர்களின் தகவலுக்காக, மத்தியப் பிரதேச மாநிலத்தில், தொலைத்தொடர்பு சேவைகளுக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ள போபால் நகர்புற பகுதிகள், இந்தூர்-நீமுச் நெடுஞ்சாலை, பிலாஸ்பூர்-அம்பிகாபூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் ஜூன் 2026-ல் நியமிக்கப்பட்ட முகமை மூலம் நடத்தப்பட்ட தனிப்பட்ட வாகன வழிச் சோதனை முடிவுகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் அளித்து வரும் மொபைல் சேவைகளின் (குரல், தரவு ஆகிய இரண்டிலும்) நேரடியாக அதன் தர நிலைகளை மதிப்பிடுவதும், சரிபார்ப்பதுமே இந்தச் சோதனையின் நோக்கமாகும். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தகவல்களை அளிக்கவும், சேவை வழங்குநர்கள் தங்களது சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும், இந்தச் சோதனையின் போது பதிவு செய்யப்பட்ட முக்கிய சேவை தர அளவீடுகள் குறித்த சேவை வழங்குநர்களின் செயல்பாடு வெளியிடப்படுகிறது.

நகர்புறங்கள், முக்கிய இடங்கள், பொதுப் போக்குவரத்து மையங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டுச் சூழல்களில், அனைத்து சேவை வழங்குநர்களின் மொபைல் சேவைகளின் செயல்பாட்டை நேரடியாகக் கண்டறியும் வகையில், இந்தச் சோதனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சோதனைகள் ட்ராய் அமைப்பின் போபால் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்டன. சோதனை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள், சோதனை நடத்தப்பட்ட நாள், நேரத்தில், அந்தந்தப் பகுதி அல்லது வழித்தடத்தில், சேவை வழங்குநர்களின் செயல்பாட்டை இந்த சோதனை முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286577&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2286781) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी