அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
விக்ரம்-1 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் வாழ்த்து தெரிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
19 JUL 2026 10:25AM by PIB Chennai
இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த விக்ரம்-1 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. இந்தச் சாதனை, உள்நாட்டு விண்வெளித் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்து வருவதை வலுப்படுத்துவதோடு, உள்நாட்டிலேயே உருவாகும் நவீனத் தொழில்நுட்பப் புத்தாக்கங்களின் மாற்றம் தரும் ஆற்றலையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல், வலுவான வணிகமயமாக்கல் ஆற்றலைக் கொண்ட நம்பிக்கைக்குரிய உள்நாட்டுத் தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து, அங்கீகரித்து, ஊக்குவிப்பதில் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் வெற்றி நாட்டிற்கு மிகவும் பெருமைக்குரிய தருணமாகும். தேசிய தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் விருது மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் நிறுவனமாக இருந்து, இந்தியாவின் தனியார் விண்வெளித் திட்டத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ள அவர்களின் குறிப்பிடத்தக்க பயணம், இந்தியாவின் புத்தாக்கச் சூழலமைப்பின் வலிமையைப் பிரதிபலிக்கிறது என்று தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய செயலாளர் திரு ராஜேஷ் குமார் பதக் கூறினார்.
ஏற்கனவே உள்நாட்டு செலுத்து வாகனத் தொழில்நுட்பங்களில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ஆற்றிய முன்னோடிப் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, 2022 தேசிய தொழில்நுட்ப தினக் கொண்டாட்டங்களின் போது, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தால் அந்நிறுவனத்திற்கு 2022-ம் ஆண்டிற்கான தேசிய தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவன விருது வழங்கப்பட்டது. இவ்விருதை, மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286239®=3&lang=1
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2286296)
आगंतुक पटल : 20