நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் பல்வேறு சோதனைகளில் 15 கிலோ கடத்தல் தங்கம், 20 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன

प्रविष्टि तिथि: 18 JUL 2026 8:11PM by PIB Chennai

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) நாடு முழுவதும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் மூலம், சுமார் ₹22 கோடி மதிப்பிலான 15 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி ஆகியவற்றுடன், ரூ. 2.20 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் குற்ற வழக்குகள் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

17.07.2026 அன்று, புதுதில்லியில் டிஆர்ஐ நடத்திய சோதனையில் சுமார் ரூ. 7.37 கோடி மதிப்புள்ள 5 கிலோ வெளிநாட்டுத் தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி ஆகியவையும், ரூ. 2.20 கோடி மதிப்புள்ள இந்தியப் பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் கைது செய்யப்பட்டனர்.

 

முன்னதாக, 15-16.07.26 அன்று புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டிஆர்ஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் ரூ. 1.35 கோடி மதிப்புள்ள, 1 கிலோ வெளிநாட்டுத் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன்  அந்தப் பயணி கைது செய்யப்பட்டார்.

 

15-16.07.2026 தேதிகளில் மும்பை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட மற்றொரு நடவடிக்கையில், சுமார் ரூ. 7.50 கோடி மதிப்புள்ள, மெழுகு வடிவிலான 5 கிலோ எடையிலான 24 காரட் தங்கத் தூள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தப்பட்ட தங்கத்தை ரகசியமாகக் கொண்டு செல்ல உதவிய மூன்று விமான நிலைய ஊழியர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

இதே நாட்களில், மேற்கு வங்கத்தின் பிதான்நகர் மற்றும் பர்தமான் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி சோதனைகளின்போது, வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்களை டிஆர்ஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சுமார் 4 கிலோ எடையுள்ள ரூ. 6 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2286162&reg=3&lang=1

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2286264) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी