PIB Backgrounder
azadi ka amrit mahotsav

விக்ரம்-1: இந்தியாவின் பிரபஞ்ச எதிர்காலத்தை வடிவமைத்தல்

प्रविष्टि तिथि: 18 JUL 2026 10:09AM by PIB Chennai

மத்திய அரசின் முற்போக்கான சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் விண்வெளித் துறை வரலாற்று மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்தியாவில் தனியாரால் உருவாக்கப்பட்ட முதலாவது ராக்கெட்டான விக்ரம்-1 ஐ, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தத் தயாராகி வரும் நிலையில், நாட்டின் வளர்ந்து வரும் தனியார் விண்வெளி சூழல் அமைப்பு இந்தச் சீர்திருத்தங்களின் தாக்கத்தை நிரூபிக்கிறது. இந்திய விண்வெளிக் கொள்கை 2023, விண்வெளிச் சூழல் அமைப்பு முழுவதும் புதுமை, முதலீடு மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், முழு விண்வெளி மதிப்புச் சங்கிலியையும் தனியார் பங்கேற்புக்கு அனுமதித்துள்ளது. இந்திய தொழில்துறை இப்போது செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதள சேவைகள், விண்வெளி பயன்பாடுகள் மற்றும் கீழ்நிலை சேவைகளில் பங்கேற்கிறது.

இந்த சீர்திருத்தங்களின் தாக்கம் ஏற்கனவே வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது.  இந்தியாவின் விண்வெளி புத்தொழில் சூழல் அமைப்பு 2014-ல் தொடங்கி, 2026-ல் 400-க்கும் அதிகம் என்ற அளவில் வளர்ந்துள்ளது, இது விண்வெளித் துறையில் தனியார் பங்கேற்பு மற்றும் கண்டுபிடிப்புகளின் விரைவான விரிவாக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

அரசின் சீர்திருத்தங்களும் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. இன்று தோராயமாக 8.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தத் துறையானது, 2030-ம் ஆண்டுக்குள் ஐந்து மடங்கு வளர்ச்சியடைந்து, 40-45 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2040-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. நிலையான அரசு ஆதரவு, விதிமுறைகளை செயல்படுத்துதல் மற்றும் வலுவான பொது-தனியார் கூட்டாண்மைகள் இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்துகின்றன.

இந்திய விண்வெளிக் கொள்கை 2023-ஐ அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, அரசு சாரா நிறுவனங்களை முழு விண்வெளி மதிப்புச் சங்கிலியிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை இந்தியாவில் விண்வெளி தொடர்பான செயல்பாடுகளுக்கு தனியார் நிறுவனங்களுக்கு கதவுகளைத் திறந்தது. இந்தத் துறையில் புதிய யோசனைகள் மற்றும் முன்னேற்றங்களை ஊக்குவித்தல், தொழில்நுட்பத்தில் புதுமைகளை உருவாக்குவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனுடன், இந்தக் கொள்கையானது சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது, விண்வெளியில் அமைதியான ஆய்வுகளை ஆதரிக்கும் கூட்டாண்மைகளை வளர்க்கிறது. ஒட்டுமொத்தமாக, இந்த நடவடிக்கைகள்  இந்தியாவில் மிகவும் வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய விண்வெளி சூழல் அமைப்பை நோக்கிய குறிப்பிடத்தக்க மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன.

இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (இன்-ஸ்பேஸ்) அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் விண்வெளி நடவடிக்கைகளை அங்கீகரிக்கவும் ஊக்குவிக்கவும் ஒரு தன்னாட்சி ஒற்றை சாளர நிறுவனமாக செயல்படுகிறது. இந்திய விண்வெளிக் கொள்கை 2023 மூலம் பலப்படுத்தப்பட்ட, இந்த மையம் ஒரு நிலையான மற்றும் யூகிக்கக்கூடிய ஒழுங்குமுறை கட்டமைப்பை வழங்குகிறது. கூடுதலாக, இது இஸ்ரோவின் வசதிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கான அணுகலை செயல்படுத்துகிறது. மேலும், வெளிப்படையான வழிகாட்டுதல்கள் மூலம் ஒப்புதல்களை ஒழுங்குபடுத்துகிறது. ஜூன் 2026 நிலவரப்படி, 4,500 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இன்-ஸ்பேஸ் பதிவுசெய்துள்ளது, 133 அங்கீகாரங்களை வழங்கியதுடன், 106 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

இந்திய விண்வெளிக் கொள்கை 2023 இஸ்ரோவின் வணிகப் பிரிவாக நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் (என்எஸ்ஐஎல்) பங்கை வரையறுத்துள்ளது. இது, வணிகக் கொள்கைகளின் அடிப்படையில் விண்வெளி அமைப்புகளை தயாரித்து வாங்குகிறது. இது அரசு நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள் ஆகிய இரண்டிற்கும் அனைத்து விண்வெளி தீர்வுகளை வழங்குகிறது. பிஎஸ்எல்வி உற்பத்தி மற்றும் சிறிய செயற்கைக்கோள் தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் தனியார் பங்கேற்பை இது மேலும் விரிவுபடுத்துகிறது.

பல ஆண்டுகளாக, நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் வருவாயில் பத்து மடங்கு அதிகரிப்பைக் கண்டுள்ளது, இது உலகளாவிய விண்வெளித் துறையில் அதன் விரிவடைந்து வரும் வணிகத் தடத்தை பிரதிபலிக்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286011&reg=3&lang=1

***

TV/PKV/PD


(रिलीज़ आईडी: 2286038) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati