சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பிஎம் அஜய் திட்டத்தில் 47.59 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்; 16,759 மாதிரி கிராமங்கள் தேர்வு
प्रविष्टि तिथि:
17 JUL 2026 6:26PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்
பிஎம் அஜய் திட்டம், பட்டியல் சமூகத்தினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியப் பங்காற்றுகிறது.
இதன் மாதிரி கிராமம் திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 47,316 கிராமங்கள் இணைக்கப்பட்டு, 47.59 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். இதுவரை 46,782 வளர்ச்சிப் பணிகள் முடிக்கப்பட்டு, 24,133 கிராம மேம்பாட்டுத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. 16,759 கிராமங்கள் மாதிரி கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், நடப்பு நிதியாண்டில் 750 மாணவர்களுக்கான மூன்று விடுதி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.22.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் கூறுகையில், இத்திட்டம் தொழில்நுட்பம் சார்ந்த வெளிப்படையான செயல்பாடுகள் மூலம் சமூக இடைவெளியைக் குறைத்து, உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதாகத் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் விடுதி வசதி, வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாடு என மூன்று முக்கிய அம்சங்கள் மூலம் பட்டியல் சமூகத்தினரின் வாழ்வு மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285859®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2285859
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2285993)
आगंतुक पटल : 8