பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பாலியல் ரீதியான துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பற்றிய தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
17 JUL 2026 1:32PM by PIB Chennai
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பற்றிய இரண்டு நாள் தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (17.07.2026) தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மகளிர், குழந்தைள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
தேசிய மகளிர் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் அரசின் மூத்த அதிகாரிகள், சட்ட நிபுணர்கள், உள்ளூர், உட்குழுக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க பாதுகாப்பான, கண்ணியமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய பணியிடங்களை உறுதி செய்வது அவசியம் என்றார். கண்ணியத்துடனும் அச்சமின்றியும் பணிபுரியும் உரிமை அனைத்து மகளிருக்கும் உண்டு என்பதை வலியுறுத்திய அவர், இத்தகைய பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அரசுகள், வேலைவழங்குவோர், நிறுவனங்கள் என அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பாகும் என்றார்.
பணியிடங்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் அனைவரையும் உள்ளடக்கிய தேச வளர்ச்சியை அடையவும் அடிப்படையாக உள்ள பணியிடப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஷீ பாக்ஸ் போர்ட்டலில் அதிகரித்து வரும் பங்களிப்பைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், புகார்களுக்கு காலவரம்புக்கு உட்பட்ட தீர்வுகளைக் காண இந்த டிஜிட்டல் தளம் நிச்சயமானதாக உருவெடுத்துள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் தேசிய மகளிர் ஆணையம் தயாரித்த உள்ளூர் குழுக்கள், உட்குழுக்களுக்கான விசாரணை நடைமுறைகள் குறித்த சிறு புத்தகம் ஒன்றை அமைச்சர் வெளியிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285668®=3&lang=1
***
SS/SMB/KPG/KR
(रिलीज़ आईडी: 2285741)
आगंतुक पटल : 9