உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டாமனிலிருந்து முதலாவது விமானச் சேவையை மத்திய அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 17 JUL 2026 11:09AM by PIB Chennai

டாமனில் புதிதாக கட்டப்பட்ட நமோ விமான நிலையத்திலிருந்து டாமன் – தில்லி – டாமன் வழித்தடத்தில் முதலாவது விமானச் சேவையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்பு 2026 ஜூலை 16 அன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி திரு பிரபுல் படேல், இந்த யூனியன் பிரதேசத்தின் மூத்த அதிகாரிகள், இந்திய விமான நிலையங்கள் ஆணைய அதிகாரிகள், இந்தியக் கடலோரக் காவல் படை அதிகாரிகள், அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு ராம் மோகன் நாயுடு, இந்த முதலாவது விமானமே தேசிய தலைநகருடன் டாமனை நேரடியாக இணைக்கும் என்றும் இதற்காக டாமன் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் கூறினார். டாமனிலிருந்து சூரத் அல்லது மும்பை சென்று 8 முதல் 10 மணி நேரம் செலவிட்டு தில்லி செல்வதற்கு பதிலாக தற்போது இரண்டரை மணி நேரத்திலேயே தில்லிக்குச் சென்றுவிட முடியும் என்று அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் டாமனுக்கு 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், விமானப் போக்குவரத்து வரைபடத்தில் டாமன் சேருவதால் இந்த எண்ணிக்கை அதிக வேகமாக வளர்ச்சியடையும் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285630&reg=3&lang=1

***

SS/SMB/KPG/PD


(रिलीज़ आईडी: 2285664) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati