விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெருநிறுவன சமூகப் பொறுப்புக்கான ஐசிஏஆர் தொழில்நுட்பத் தொகுப்பு மாநாடு 2026 புதுதில்லியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 16 JUL 2026 11:42AM by PIB Chennai

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஏஆர்), அக்ரிஇன்னோவேட் இந்தியா நிறுவனம் இணைந்து பெருநிறுவன சமூகப் பொறுப்புக்கான ஐசிஏஆர்  தொழில்நுட்பத் தொகுப்பு மாநாடு 2026-ஐ வெற்றிகரமாக நடத்தியது. புதுதில்லியில் நடைபெற்ற இந்த மாநாடு பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முன்முயற்சிகள் மூலம் நீடித்த வேளாண் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஐசிஏஆர்  பெருநிறுவனங்கள், தொழில்துறைத் தலைவர்கள், அறக்கட்டளைகள்,  இதர பங்குதாரர்களுக்கு இடையே கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான முதன்மையான தளமாக அமைந்தது.

இம்மாநாட்டில்  பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுக்கு உகந்த  ஐசிஏஆர்-ன் தொழில்நுட்பத் தொகுப்புகள், புதுமைகண்டுபிடிப்பு ஆராய்ச்சி, விரிவுபடுத்தக்கூடிய நடைமுறைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.

பருவநிலைக்கு உகந்த வகையில் இந்திய வேளாண்மையை மாற்றுதல், இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் மற்றும் பயிர் பல்வகைப்படுத்துதல் மூலம் மண் வளத்தை மேம்படுத்துதல், ஆரோக்கியத்திற்காக வேளாண்மை, வேளாண்மைத் திறன், வேளாண்மை மற்றும் வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் மகளிர் பங்களிப்பு ஆகியவை இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும். உத்திசார்ந்த பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முதலீடுகள் மூலம் நீடித்த ஊரகப் பகுதி மேம்பாட்டை மேம்படுத்தும் அதே சூழலில், வேளாண் துறையில் முக்கிய சவால்களுக்குத் தீர்வு காண்பதை இந்த முதன்மைப் பிரிவுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்நிகழ்விற்கு பெருநிறுவனங்கள் துறையிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. 75 தொழில்துறையைச் சேர்ந்த  சுமார் 150 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றன. இது பெருநிறுவனங்கள், சமூகப் பொறுப்புணர்வு கூட்டாண்மைகள் மூலம் வேளாண் துறை மாற்றத்திற்கு ஆதரவளிப்பதில் வளர்ந்து வரும் தொழில்துறை நிறுவனங்களின் ஆர்வத்தைப் பிரதிபலித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285252&reg=3&lang=1   

***

SS/IR/KPG/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2285606) வருகையாளர் எண்ணிக்கை : 39
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Kannada