ஜவுளித்துறை அமைச்சகம்
இந்திய பிராண்டுகள் உலக அரங்கில் தடம் பதிக்க இதுவே சரியான தருணம்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUL 2026 8:08PM by PIB Chennai
இந்திய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி 2025-26-இல் சுமார் ரூ. 3.16 லட்சம் கோடியை எட்டியுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் இதனை ரூ. 9 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பிராண்டுகள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் உலக அரங்கில் தங்களை முன்னிலைப்படுத்த இதுவே சரியான தருணம் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
தில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் 2026 கண்காட்சியின் ஒரு பகுதியாக, "இந்திய பிராண்டுகள், உலகளாவிய இலக்குகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் அமைச்சர் பேசுகையில், "கைவினைஞர்களே இந்தியாவின் மூலதனம்" என்று குறிப்பிட்டார். இந்திய ஜவுளித்துறையின் வளமான பாரம்பரியத்தையும், கைவினைத்திறனையும் உலகிற்கு எடுத்துரைப்பதில் இத்தகைய கண்காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார். தரம், நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் இந்திய பிராண்டுகள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
முன்னணி வடிவமைப்பாளர்கள் வைஷாலி ஷடங்குலே, ராகுல் மிஷ்ரா மற்றும் தொழில்துறை தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தியாவின் தனித்துவமான கைத்தறி கலைகள் மற்றும் பாரம்பரிய வடிவமைப்பு முறைகளே உலக சந்தையில் இந்தியாவிற்கான அடையாளத்தை உருவாக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2285515®=3&lang=1
***
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2285580)
வருகையாளர் எண்ணிக்கை : 30