அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு சார்ந்த உயிரி உற்பத்தித் துறையில் இந்தியாவின் நிலையை மேம்படுத்துவதற்கான செயல்திட்டம் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்

இந்தியாவில் பொறியியல் உயிரியல் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது : மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்தர் சிங் அறிவிப்பு

प्रविष्टि तिथि: 16 JUL 2026 6:14PM by PIB Chennai

அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் முதல் பொறியியல் உயிரியல் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என இன்று (16.07.2026) அறிவித்தார். இது, நாட்டின் நீண்டகால அறிவியல், சுகாதார, பொருளாதார எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கக்கூடிய ஒரு சுதந்திரமான உயிரித்தொழில்நுட்பச் சூழலமைப்பை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படி என்று அவர் தெரவித்தார்.

"2035-க்குள் இந்தியாவை ஒரு முன்னணி உயிரிப் பொருளாதார வல்லரசாக உருவாக்குதல்" என்ற செயல்திட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய அமைச்சர், கணினி அறிவியல் டிஜிட்டல் புரட்சியை வழிநடத்தியதைப் போலவே, இந்தியாவின் உயிரிப் பொருளாதாரத்தின் அடுத்த கட்டத்திற்கு பொறியியல் உயிரியல் ஒரு அடித்தளத் துறையாக உருவெடுக்கும் என்று கூறினார். பொறியியல், உயிரியல், சுகாதாரம் ஆகியவற்றின் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், ஐஐடி-க்கள் ஏற்கனவே மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து பல்துறை சார்ந்த திட்டங்களுக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில், செயல்திட்டத்தின் முறையான தொடக்கத்திற்கு முன்னதாக, அதன் விளக்கக்காட்சி, தொழில்துறை கண்ணோட்டங்கள், மூத்த கொள்கை வகுப்பாளர்களின் உரைகள் இடம்பெற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285438&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2285574) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi