மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
உற்பத்தித் துறையில், பாதுகாப்பான பணிச்சூழல், உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகள், உலக அரங்கில் இந்தியாவை நம்பகத்தன்மை கொண்ட நாடாக உருவெடுக்கச் செய்கிறது
प्रविष्टि तिथि:
15 JUL 2026 3:39PM by PIB Chennai
செமிகண்டக்டர் பெரும்பாலும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை என்றாலும், நவீன வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் அமைதியாக இயக்குவதற்கு உதவுகின்றன. யுபிஐ மூலம் பணம் செலுத்துவதற்குப் பயன்படும் ஸ்மார்ட்போன், நகர்புறச் சாலைகளில் செல்லும் வாகனம் முதல், மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ உபகரணங்கள், விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள், நிர்வாகத்திற்கு உதவிடும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் வரை, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகின் அடித்தளமாக, இந்தச் சிறிய வடிவ செமிகண்டக்டர் சிப்கள் அமைந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு, 5ஜி, மின்சார வாகனப் போக்குவரத்து, இணையவழிப் பொருட்கள் போன்ற தொழில்நுட்பங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த அங்கமாக மாறி வருவதால், உலகம் முழுவதும் செமிகண்டக்டர்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஒரு வாய்ப்பாகவும், முக்கிய உத்திசார் தேவையாகவும் அமைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், உலகின் மிக விரைவாக வளர்ந்து வரும் மின்னணுவியல் சாதன உற்பத்திச் சூழலமைப்புகளில் ஒன்றை உருவாக்கியுள்ள இந்தியா, தற்போது, விரிவான செமிகண்டக்டர் உற்பத்திக்கான சூழலமைப்பை உருவாக்குவதன் மூலம், தொழில்நுட்ப நடவடிக்கைகளின் அடுத்த கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது. செமிகான் இந்தியா திட்டம் 2.0 மூலம், வடிவமைப்பு, உற்பத்தி முதல் மேம்பட்ட பேக்கேஜிங், மூலப்பொருட்கள், உபகரணங்கள், ஆராய்ச்சி, திறமையான மனிதவளம் வரை முழு மதிப்புச் சங்கிலியையும் வலுப்படுத்த மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284806®=3&lang=1
***
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2285069)
आगंतुक पटल : 5