கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் போர்பந்தரில் கப்பல் கட்டுமானத் தொகுப்பு தொடங்கப்பட உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 15 JUL 2026 3:39PM by PIB Chennai

உலகளாவிய கப்பல் கட்டுமான மையமாக திகழ வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தின் முக்கிய நடவடிக்கையாக கப்பல் கட்டுமான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2 முக்கிய கடல்சார் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் துறை அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

குஜராத்தின் போர்பந்தர் மாவட்டத்தில் ஓர் புதிய கப்பல் கட்டுமானத் தொகுப்பு, கட்ச் வளைகுடாவில் உள்ள வதினாறில் அதிநவீன கப்பல் பழுது பார்க்கும் வசதி ஆகியவை இந்த இரண்டு திட்டங்களாகும்.

கடல்சார், அமிர்த கால தொலைநோக்கு 2047-ன் கீழ், உள்நாட்டுக் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது பார்க்கும் திறன்களை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசின் கப்பல் கட்டுமான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால், கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், முக்கிய சீர்திருத்தங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, கொள்கை ஆதரவு ஆகியவற்றின் மூலம் இந்திய கடல்சார் துறை வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கண்டுள்ளதாகக் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284805&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2285065) வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Assamese , Gujarati