சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய மருந்தியல் ஆணையம் உத்தரப்பிரதேச மருந்து உற்பத்தி மேம்பாட்டுக் குழுமத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது

இடுகை இடப்பட்ட நாள்: 15 JUL 2026 11:30AM by PIB Chennai

உயர்தர சுகாதார நலன், தரங்களை மேம்படுத்துதல், ஒழுங்குமுறைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கிய நடவடிக்கையாக இந்திய மருந்தியல் ஆணையம் உத்தரப்பிரதேச மருந்து உற்பத்தி மேம்பாட்டுக் குழுமத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் கிரேட்டர் நொய்டாவில், 2026 ஜூலை 14 அன்று கையெழுத்தானது.

இந்தத் துறையில் தரநிலைகள், ஒழுங்குமுறைத் திறன், புதுமை கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் மருந்து மற்றும் மருத்துவ உபகரணச் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது இந்த உத்திசார்ந்த கூட்டாண்மையின் நோக்கமாகும்.

இதன் மூலம் இந்திய மருந்தியல் ஆணையமும், உத்தரப்பிரதேச மருந்து உற்பத்தி மேம்பாட்டுக் குழுமமும் பல்வேறு வகைகளில் இணைந்து செயல்படும்.

இந்தக் கூட்டாண்மை தரம், பாதுகாப்பு, புதுமை கண்டுபிடிப்பு, உலகளாவிய போட்டித் தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில்  வலுவான சூழலைக் கட்டமைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284706&reg=3&lang=1   

***

SS/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2285061) வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati