தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

15வது பிரிக்ஸ் தொழிற்சங்க அமைப்பின் உச்சிமாநாட்டை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஐதராபாதில் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 14 JUL 2026 4:35PM by PIB Chennai

15வது பிரிக்ஸ் தொழிற்சங்க அமைப்பின் உச்சிமாநாட்டை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஐதராபாதில் இன்று (14. 07. 2026) தொடங்கி வைத்தார். சமூக நீதி, பொறுப்பான புத்தாக்கம், மனித மாண்பு ஆகியவற்றால் தொழில்நுட்ப முன்னேற்றம் வழிநடத்தப்படும் உலகளாவிய தொழிலாளர் மைய ஒழுங்கை உருவாக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

தொடக்க அமர்வில் பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகளிடையே உரையாற்றிய அமைச்சர், இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவ கருப்பொருள் “மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக் கட்டமைப்பு” என்றும், பணியின் எதிர்காலம்  அனைவரையும் உள்ளடக்கியதாகவும், சமத்துவமானதாகவும், தொழிலாளர்களின் நலனை மையமாகக் கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் நாட்டின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.

பிரிக்ஸ் நாடுகளிலிருந்து வருகைதந்த பிரதிநிதிகளை வரவேற்றுப் பேசிய டாக்டர் மாண்டவியா, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், தொழில்துறை நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதிலும், பொருளாதார முன்னேற்றத்துடன் சமூக நீதியும் இணைந்திருப்பதை உறுதி செய்வதிலும் தொழிற்சங்கங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன என்றார். அரசின் தொழிலாளர் சீர்திருத்தங்களை எடுத்துரைத்த அமைச்சர், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் 29 தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்தப்பட்ட கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைத்து, தொழிலாளர்களின் உரிமைகளை வலுப்படுத்தியுள்ளன என்றார். இந்த சீர்திருத்தங்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம், நியமனக் கடிதங்கள், மேம்படுத்தப்பட்ட தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், டிஜிட்டல் இணக்க அமைப்புகள் ஆகியவற்றை உறுதி செய்திருப்பதுடன் முதல் முறையாக, செயலி தொழிலாளர்கள் மற்றும் நடைபாதை தொழிலாளர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்குகின்றன என்றும் அவர் கூறினார்.

பாரதிய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்) ஏற்பாடு செய்துள்ள இந்த மூன்று நாள் உச்சிமாநாட்டில், 50-க்கும் அதிகமான சர்வதேசப் பிரதிநிதிகளையும், இந்தியத் தொழிற்சங்கங்களின் சுமார் 70 பிரதிநிதிகள், தொழிலாளர் நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களையும் பங்கேற்றுள்ளனர். அடுத்த இரண்டு நாட்களில் நடைபெறும் கலந்துரையாடல்கள், உலகளாவிய சமூகப் பாதுகாப்பு மற்றும் பயன்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளுதல், மனிதனை மையமாகக் கொண்ட தொழில்நுட்பம் மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு, பணியின் எதிர்காலத்திற்கான திறன் மேம்பாடு, மற்றும் மாறிவரும் பணி உலகில் பெண்கள் ஆகிய நான்கு கருப்பொருள் சார்ந்த துறைகளில் கவனம் செலுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284488&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2284638) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu