புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
ஜூன் 2026: இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு
प्रविष्टि तिथि:
13 JUL 2026 4:00PM by PIB Chennai
நாட்டில் 2024-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்படும் சில்லறை பணவீக்க விகிதம், ஜூன் 2026ல் 4.38 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. முந்தைய மே மாதத்தில் இது 3.93 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கிராமப்புற பணவீக்கம் 4.74 சதவீதமாகவும், நகர்ப்புற பணவீக்கம் 3.92 சதவீதமாகவும் உள்ளது.
உணவுப் பொருட்களின் மீதான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.32 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, வெள்ளி ஆபரணங்கள் (133.21%), இஞ்சி (50.41%), தங்கம்/வைரம்/பிளாட்டினம் ஆபரணங்கள் (36.82%) மற்றும் தக்காளி (31.92%) ஆகியவற்றின் விலையேற்றம் பணவீக்கத்தை உயர்த்தியுள்ளது. அதேநேரம், உருளைக்கிழங்கு (-20.34%) மற்றும் பட்டாணி (-9.67%) போன்ற பொருட்களின் விலை குறைந்துள்ளது.
மாநில வாரியாகப் பார்க்கும்போது, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பணவீக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. தேசிய புள்ளியியல் அலுவலகம் நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தைகளில் இருந்து சேகரித்த தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284125®=3&lang=1
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2284333)
आगंतुक पटल : 7