தேசிய மனித உரிமைகள் ஆணையம்
சத்தீஸ்கர் தொழிற்சாலை வெடிவிபத்து தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம்
प्रविष्टि तिथि:
13 JUL 2026 1:55PM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஊர்லா தொழிற்பேட்டையில், கடந்த ஜூன் 7ம் தேதி நடைபெற்ற பயங்கர வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர். ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததே இந்தத் துயரத்திற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்துத் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், இது தீவிரமான மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சத்தீஸ்கர் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குனருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284047®=3&lang=1
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2284325)
आगंतुक पटल : 6