பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிர்வாகச் சீர்திருத்தங்களுடன், நிர்வாக மாற்றத்தின் அடுத்த கட்டத்திற்கு இந்தியா முன்னேறுகிறது மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
13 JUL 2026 5:41PM by PIB Chennai
ஒரு தசாப்தத்திற்கும் மேலான முன்னோடியான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் கிட்டத்தட்ட 2,000 காலாவதியான விதிகளை நீக்கிய பிறகு, இந்தியா அடுத்த தலைமுறை நிர்வாக மற்றும் மின்-ஆளுகை சீர்திருத்தங்கள் மூலம் நிர்வாக மாற்றத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழைகிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணையமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளின் இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
ஷில்லாங்கில், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (DARPG) மற்றும் மேகாலயா அரசு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த, 'அடுத்த தலைமுறை நிர்வாக மற்றும் மின்னணு ஆளுகைச் சீர்திருத்தங்கள்' குறித்த இரு நாள் தேசிய மாநாட்டை இன்று அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்த "சீர்திருத்த எக்ஸ்பிரஸ்" அழைப்பை நினைவு கூர்ந்தார். எதிர்கால சீர்திருத்தங்கள், செயற்கை நுண்ணறிவு, இணையவழிப் பாதுகாப்பு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைத் தளங்களை ஒருங்கிணைத்து, 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை நிறைவேற்றும் திறன் கொண்ட ஒரு சுறுசுறுப்பான, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஆளுகைச் சூழலியலை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284179®=3&lang=2
***
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2284313)
आगंतुक पटल : 6