தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உறைவிடப் பள்ளியொன்றில் 4 மாணவர்களைப் பாம்பு கடித்து ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
13 JUL 2026 1:53PM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டாஹா மாவட்டத்தில் உறைவிடப் பள்ளியொன்றில் 2026, ஜூலை 7 அன்று 4 மாணவிகளைப் பாம்பு கடித்து ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது மற்ற 3 மாணவிகளும் சிகிச்சைபெற்று வருகின்றனர். இரவுநேர உணவுக்குப் பின் விடுதியின் தரைத்தளத்தில் உறங்கியபோது அவர்களைப் பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது.
செய்தியின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், அது மாணவர்களின் மனித உரிமைகளை மீறும் கடுமையான பிரச்சனை என்று ஆணையம் கூறியுள்ளது. எனவே, இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாநில தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், காயமடைந்த மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026, ஜூலை 10 அன்று வெளியான ஊடகச் செய்தியில், காயமடைந்த மாணவிகளில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் சிறப்பு சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
TV/SMB/SE
(रिलीज़ आईडी: 2284294)
आगंतुक पटल : 9