பிரதமர் அலுவலகம்
நித்தி ஆயோக் உறுப்பினராக பேராசிரியர் கோபர்தன் தாஸ் நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
25 APR 2026 10:47PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, பேராசிரியர் கோபர்தன் தாஸ் நிதி ஆயோக் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய தமது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். அயராத அர்ப்பணிப்பு, பணிவு ஆகிய பண்புகள் நிறைந்த பேராசிரியர் தாஸின் பயணம் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். பொது சுகாதாரம், அறிவியல், புத்தாக்கம் ஆகிய துறைகளில் பேராசிரியர் தாஸ் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளை அவர் எடுத்துரைத்துள்ளதோடு, அவரது சாதனைகளைக் கண்டு ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பேராசிரியர் கோபர்தன் தாஸ் அவர்களே, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
அயராத உழைப்பும் பணிவும் நிறைந்த உங்கள் பயணம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. பொது சுகாதாரம், அறிவியல், புத்தாக்கம் ஆகிய துறைகளுக்கு நீங்கள் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்காக ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது. உங்கள் பதவிக்காலம் சிறப்பாக அமைய என் நல்வாழ்த்துகள்."
***
(Release ID: 2255595)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2284234)
வருகையாளர் எண்ணிக்கை : 38
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam