வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஸ்பெயின், பெல்ஜியம், பின்லாந்து நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 12 JUL 2026 2:41PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், நாளை 2026 ஜூலை 13 முதல் வரும் 17-ம் தேதி வரை ஸ்பெயின், பெல்ஜியம், பின்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கோள்கிறார். அவருடன் ஒரு உயர்மட்ட இந்திய வர்த்தகக் குழுவும் செல்கிறது. வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புத்தாக்கம், நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஐரோப்பா முழுவதும் பொருளாதாரக் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்தப் பயணம் எடுத்துக் காட்டுகிறது. இந்தக் குழுவில், மேம்பட்ட உற்பத்தி, தூய்மையான எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், ரத்தினங்கள், ஆபரணங்கள், உணவு பதப்படுத்துதல், சுகாதாரம், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.

ஜூலை 13 அன்று ஸ்பெயினில், அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஸ்பெயினில் வர்த்தக வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பார்.

ஜூலை 14, 15 தேதிகளில் பெல்ஜியத்தில், அந்நாட்டு வர்த்தக அமைச்சர், தொழில்துறையினர் உள்ளிட்டோருடன் திரு பியூஷ் கோயல் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

ஜூலை 16, 17 தேதிகளில் பின்லாந்தில் நடைபெறும் இந்தியா-பின்லாந்து வர்த்தக வட்டமேசை மாநாட்டில் அமைச்சர் பங்கேற்பார். அங்கு அவர், டிஜிட்டல்மயமாக்கல், தூய்மையான ஆற்றல், மேம்பட்ட உற்பத்தி, சுழற்சிப் பொருளாதாரம் ஆகிய துறைகளில் உள்ள பின்லாந்து நிறுவனங்களுடன் கலந்துரையாடுவார்.

ஸ்பெயின், பெல்ஜியம், பின்லாந்து ஆகிய நாடுகளில் அமைச்சர் மேற்கொள்ளும் இந்தப் பயணம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283831&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2283859) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Malayalam