பிரதமர் அலுவலகம்
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
12 JUL 2026 9:30AM by PIB Chennai
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவு, இசை, கலாச்சார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று பிரதமர் கூறியுள்ளார். பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள், தலைமுறை தலைமுறையாகப் பிரபலமாக இருப்பதோடு, ஈடு இணையற்ற நளினத்துடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்விற்கும் அவர் குரல் கொடுத்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மெல்லிசை கேட்போரைத் தொடர்ந்து வசீகரிக்கும் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு, இசை, கலாச்சார உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள், தலைமுறை தலைமுறையாகப் பிரபலமாக உள்ளன. ஈடு இணையற்ற நளினத்துடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்விற்கும் குரல் கொடுத்துப் பாடியுள்ளார். அவரது மெல்லிசை, பல ஆண்டுகளுக்கு கேட்போரைத் தொடர்ந்து வசீகரிக்கும். இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த இசைத்துறைக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி."
***
(Release ID: 2283800)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2283827)
வருகையாளர் எண்ணிக்கை : 104
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada