சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் நமஸ்தே தினம் கொல்கத்தாவில் ஜூலை 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது
प्रविष्टि तिथि:
11 JUL 2026 4:35PM by PIB Chennai
ஒழுங்குபடுத்தப்பட்ட சுகாதாரச் சூழல் அமைப்பிற்கான தேசிய நடவடிக்கை - நமஸ்தே திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் ஜூலை 14 அன்று இத்திட்டத்தின் 3-வது ஆண்டு தினத்தைக் கொண்டாடுகிறது.
இதன் முக்கிய நிகழ்வு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ரவீந்திர சதனில் 'திவ்ய கலா' நிகழ்ச்சியுடன் இணைந்து நடைபெறும். அதேவேளையில், நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் இதற்கான நிகழ்வுகள் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், மேற்கு வங்க முதலமைச்சர் திரு. சுவேந்து அதிகாரி ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசின் மூத்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகப் பிரதிநிதிகள், தேசிய தூய்மை பணியாளர்கள் நிதி மேம்பாட்டுக் கழகம், பிற முக்கியப் பிரமுகர்களும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தினத்தை முன்னிட்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தூய்மை பணியாளர்களின் நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதில் தொழில்சார் பாதுகாப்புப் பயிற்சி, மருத்துவப் பரிசோதனை முகாம்கள், அரசு சலுகைகளைப் பெற்றுத் தருதல், இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார உபகரணங்கள், பாதுகாப்புச் சாதனங்களின் செயல்விளக்கம், துப்புரவுப் பணியாளர்களின் பங்களிப்பை அங்கீகரித்தல் ஆகியவை அடங்கும்.
பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றும் துப்புரவுப் பணியாளர்களை, கழிவுநீர், செப்டிக் டேங்க் (கழிவுநீர்த் தொட்டி) பணியாளர்கள், கழிவு சேகரிப்பாளர்கள், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் உட்பட துப்புரவுப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் 'நமஸ்தே' தினம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதாரம், திறன் மேம்பாடு, பாதுகாப்பு உபகரணங்கள், நிலையான வேலைவாய்ப்பு மூலம் இப்பணியாளர்களின் பாதுகாப்பு, கண்ணியம், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்த தினம் வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283651®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2283700)
आगंतुक पटल : 14