கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் கிப்ட் நகரில் சர்வதேச நிதிச் சேவை மைய பிரிவுகளுக்கு கடலோர கப்பல் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் உரிமம் பெறுவதிலிருந்து விலக்கு

இடுகை இடப்பட்ட நாள்: 10 JUL 2026 6:34PM by PIB Chennai

இந்தியாவின் கடல்சார் சேவை கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், காந்திநகரில் உள்ள கிப்ட் நகரில் உள்ள சர்வதேச நிதிச் சேவை மையத்தின் பிரிவுகளுக்கு கடலோர கப்பல் போக்குவரத்து சட்டம் 2025-ன் கீழ் வெளிநாட்டு கப்பல்களை வாடகைக்கு எடுப்பதற்கான உரிமம் பெறுவதிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் பாதைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த முக்கிய அறிவிப்பு, தகுதிவாய்ந்த பிரிவுகள் கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்திடம் உரிமம் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கிறது. இந்தச் சீர்திருத்த நடவடிக்கை கடல்சார் முதலீடுகளை எளிதாக்குவதோடு கிப்ட் நகரை உலகளாவிய கடல்சார் சேவை மையமாக மாற்ற உதவும்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் கடந்த 12 ஆண்டுகளில் கடல்சார் துறை உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார். இந்த விலக்கு நடவடிக்கை பிரிவு 11-ன் கீழ் சர்வதேச வர்த்தக செயல்பாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். கடலோர வர்த்தகத்திற்கு தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283401&reg=3&lang=1

****

TV/PD/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2283515) வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati