ஜவுளித்துறை அமைச்சகம்
‘எதிர்காலத்தை நெய்வோம் 4.0 – மறுபயன்பாடு பதிப்பு’: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் நடத்துகிறது
प्रविष्टि तिथि:
10 JUL 2026 6:50PM by PIB Chennai
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கைத்தறி மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் சார்பில், கைவினைப்பொருட்கள், கைத்தறிப்பொருட்களுக்கான "தில்லி சந்தை" பொருட்காட்சியில் வரும் ஜூலை 12 முதல் 17 வரை ‘எதிர்காலத்தை நெய்வோம் 4.0 – மறுபயன்பாடு பதிப்பு’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜவுளித்துறை சூழலியல் பாதுகாப்பு, நிலையான உற்பத்தி, புதுமைகளைப் புகுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நடைபெறும் இந்நிகழ்வை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் ஜூலை 13 அன்று தொடங்கி வைக்கிறார்.
நாட்டின் வளர்ந்து வரும் ஜவுளிக் கழிவு சவால்களுக்கு நடைமுறை தீர்வுகளைக் காணும் நோக்கில் ‘இது எதனால் ஆனது?’ என்ற தேசிய அளவிலான ஜவுளிக் கழிவு கண்டுபிடிப்பு போட்டியையும் அமைச்சகம் இதில் அறிமுகப்படுத்துகிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 70.73 லட்சம் டன் ஜவுளிக் கழிவுகள் உருவாகும் நிலையில், பாரம்பரிய கைவினைத்திறன் மூலம் அவற்றை எவ்வாறு பொருளாதார மதிப்பு மிக்கவையாக மாற்றலாம் என்பதை இத்திட்டம் விளக்குகிறது. மாணவர்கள், நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், இளம் தொழில்முனைவோர் பங்கேற்கும் இப்போட்டிக்கு ஜூலை 20 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283412®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2283505)
आगंतुक पटल : 10