பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இந்தியாவின் பன்முகத்தன்மை நிர்வாகத்திலும் எதிரொலிக்கிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
10 JUL 2026 6:53PM by PIB Chennai
இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் சமூகத்தில் மட்டுமின்றி, நிர்வாக அமைப்புகளிலும் எதிரொலிக்கிறது. எனவே, அடுத்த தலைமுறை பொது நிர்வாகத்தை கட்டமைப்பதற்கு, தொடர்ச்சியான கற்றல், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் சூழலுக்கு ஏற்ப செயல்படும் தலைமைத்துவம் ஆகியவை அவசியம் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கான நான்காம் கட்ட 'பணி இடைக்காலப் பயிற்சித் திட்டத்தின்' (MCTP) 21-வது சுற்றின் நிறைவு விழாவில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார். ஜூன் 15 முதல் ஜூலை 10 வரை நடைபெற்ற இந்த நான்கு வார காலப் பயிற்சித் திட்டம், கர்மயோகி இயக்கத்தின் கீழ் உயர்திறன் மேம்பாட்டிற்காக, நாடு முழுவதிலுமிருந்து 14 ஆண்டுகளுக்கும் மேலான நிர்வாக அனுபவம் கொண்ட 51 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒன்றிணைத்தது.
இந்தியாவின் அடுத்தகட்ட நிர்வாகத்திற்குத் தொடர்ச்சியான கற்றல், இளம் தலைமைத்துவம், நிறுவன அளவிலான புதுமை மற்றும் குடிமக்கள் மையத்திலான சீர்திருத்தங்கள் ஆகியவை அவசியம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமான நிர்வாகச் சூழல், எதிர்பார்ப்புகள் மற்றும் வளர்ச்சி முன்னுரிமைகளைக் கொண்டுள்ளன என்பதை வலியுறுத்திய அவர், இந்தியாவின் பிராந்திய பன்முகத்தன்மை, நிர்வாக வலிமையின் ஊற்றாக அமையும் வகையில், பல்வேறு பணிப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தங்கள் அனுபவங்களையும் வெற்றிகரமான நிர்வாக நடைமுறைகளையும் தீவிரமாகப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை மற்றும் குடிமக்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட துணிச்சலான முடிவெடுக்கும் நடவடிக்கைகளே கடந்த பத்தாண்டுகளில் நிர்வாகச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் சேவை வழங்கல் ஆகியவற்றை மேம்படுத்தியதற்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்ற நிர்வாகப் புத்தாக்கங்களுக்கு உதாரணமாக, நேரடிப் பலன் பரிவர்த்தனைத் திட்டம் கசிவுகளைத் தடுத்து சுமார் ₹3.4 லட்சம் கோடி சேமிப்பை உருவாக்கியுள்ளதுடன், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ), டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, ஜாம் திட்டம் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283415®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2283492)
आगंतुक पटल : 9