சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பிரிக்ஸ் போக்குவரத்துப் பணிக்குழுக் கூட்டம் நாக்பூரில் தொடக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
09 JUL 2026 7:35PM by PIB Chennai
நிலையான, மீள்திறன் கொண்ட, எதிர்காலத்திற்குத் தயாரான போக்குவரத்து அமைப்புகள் குறித்த திட்டங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகளை ஒன்றிணைக்கும் 3-வது பிரிக்ஸ் போக்குவரத்து பணிக்குழுக் கூட்டம், இந்தியாவின் பிரிக்ஸ் 2026 தலைமைத்துவத்தின் கீழ் இன்று (09.07.2026) நாக்பூரில் தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிலையான போக்குவரத்து உட்கட்டமைப்பு, தூய்மையான போக்குவரத்து, பன்முக இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய கொள்கை அம்சங்கள் குறித்து பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் விவாதிப்பார்கள். அதேவேளையில், வளர்ந்து வரும் உலகளாவிய போக்குவரத்து சவால்களை எதிர்கொள்வதற்காக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறைத்தும் ஆலோசனை நடத்தப்படும்.
முதல் நாள் கூட்டத்தில் பிரதிநிதிகளை வரவேற்றுப் பேசிய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு வி. உமாசங்கர், உலகம் ஒரு குடும்பம் என்ற காலத்தால் அழியாத கொள்கையின் வழிகாட்டுதலுடன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்தார். உறுதியான போக்குவரத்துக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் அவர் பேசினார்.
இந்த இரண்டு நாள் பணிக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து, 2026 ஜூலை 11 அன்று நாக்பூரில் 3-வது பிரிக்ஸ் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283008®=3&lang=1
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2283056)
வருகையாளர் எண்ணிக்கை : 43