தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்புத் துறையின் சம்ரித் கிராம் திட்டம் டபிள்யூஎஸ்ஐஎஸ்-ன் மதிப்புமிக்க விருதை வென்றுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
09 JUL 2026 3:52PM by PIB Chennai
தொலைத்தொடர்புத் துறை தனது முதன்மைத் திட்டமான சம்ரித் கிராம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டமானது மதிப்புமிக்க 'உலகத் தகவல் சமூகத்திற்கான உச்சிமாநாடு' எனப்படும் டபிள்யூஎஸ்ஐஎஸ்-ன் 2026-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில், சி6 செயல் வரிசையில் உகந்த சூழல் என்பதன் கீழ் உலகளாவிய வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, விருது வென்றுள்ளது. இந்த திட்டம், இந்தியாவின் தொலைதூர, கிராமப்புறங்களுக்கு ஒருங்கிணைந்த டிஜிட்டல் சேவைகளை வழங்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய கிராமப்புற வளர்ச்சிக்காக டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பையும் தொலைத்தொடர்பு இணைப்பையும் பயன்படுத்துவதில் இந்தியாவின் புதுமையான அணுகுமுறையை அங்கீகரிக்கும் வகையில், ஜெனீவாவில் நடைபெற்ற டபிள்யூஎஸ்ஐஎஸ் மாநாட்டின்போது இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொலைத்தொடர்பு யூனியனின் தலைமையில் நடைபெறும் தகவல் சமூகத்திற்கான உலக உச்சிமாநாட்டு செயல்முறையின் கீழ் நிறுவப்பட்ட டபிள்யூஎஸ்ஐஎஸ் விருதுகள், தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திட்டங்களுக்கான உலகின் மிகவும் மதிப்புமிக்க அங்கீகாரங்களில் ஒன்றாகும். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த மற்றுமொரு மகுடம் என்று கூறியுள்ளார். பாரத்நெட் உதவியுடன், கிராம அளவில் சுகாதாரம், கல்வி, டிஜிட்டல் வங்கி, வாழ்வாதார சேவைகளை வழங்குவதன் வழியாக, சம்ரித்தி கிராம் திட்டமானது மக்களுக்குப் பெரிய பயன் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282831®=3&lang=1
***
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2283037)
வருகையாளர் எண்ணிக்கை : 48