நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிதிச் சேவைகள் துறையின் காப்பீட்டுப் பிரிவு, மே மாதத்திற்கான குறைதீர்ப்புக் குறியீட்டில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 JUL 2026 3:05PM by PIB Chennai

நிதிச் சேவைகள் துறையின் வங்கி - காப்பீட்டுப் பிரிவுகள் ஆண்டுதோறும் 2.50 லட்சத்திற்கும் அதிகமான குறைகளைப் பெற்று வருகிறது. நவம்பர் 2025 முதல், குறைதீர்ப்பு மதிப்பீட்டு, குறியீட்டு தரவரிசையில் இது தொடர்ந்து முதல் 10 அமைச்சகங்கள் / துறைகளுக்குள்  இடம் பெற்று வருகிறது.

மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள், பொது மக்கள் குறைதீர்ப்புத் துறையால் வெளியிடப்பட்ட தரவரிசையில், மே 2026-ல் காப்பீட்டுப் பிரிவு 2-வது இடத்தைப் பிடித்தது. வங்கிப் பிரிவு அதே பிரிவில் 6-வது இடத்தைப் பிடித்தது.

2024-ம் ஆண்டு ஜனவரி முதல், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாக இயக்குநர்கள், தலைமைச் செயல் அதிகாரிகள் ஆகியோருடன் புகார்தாரர்களும் நேரடியாகப் பங்கேற்கும் வகையில், நிதிச் சேவைகள் துறையின் செயலாளர், தேர்வு செய்யப்படும் சில புகார்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இந்த முயற்சியானது வாடிக்கையாளர் நம்பிக்கையை மேம்படுத்துவதையும், குறைகளுக்கு அர்த்தமுள்ள தீர்வை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிதிச் சேவைகள் துறையானது, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி தணிக்கை - மதிப்பீட்டு ஆணையம், பொது நிதி ஒழுங்குமுறை ஆணையம், அனைத்து பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றுடன் இணைந்து 'பயனுள்ள குறைதீர்ப்பு கட்டமைப்பு' குறித்த பயிலரங்குகளை நடத்தியுள்ளது. இந்தப் பயிலரங்குகள், புகார்களின் காரணங்களைக் கண்டறிவதிலும், குறைதீர்ப்பின் தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தின. மேலும், வாடிக்கையாளர்களின் கவலைகளை பரிவுடன் அணுகுமாறு நிறுவனங்களை அவை ஊக்குவித்தன. இதன் மூலம், பொதுமக்களின் நம்பிக்கையை கணிசமாக வலுப்படுத்தி, சேவை வழங்கல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282804&reg=3&lang=1

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2283030) வருகையாளர் எண்ணிக்கை : 63
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Odia , Telugu