தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானில் மொபைல் நெட்வொர்க் தர சோதனையை இந்தியத் தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 09 JUL 2026 1:28PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர், பலோட்ரா, பச்பத்ரா நகரங்கள், அதையொட்டிய பகுதிகளில் இந்தியத் தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையம் 2026 ஜூன் மாதத்தில் மொபைல் தொலைத்தொடர்பு சேவை சோதனையை நடத்தியது. தரவு பதிவிறக்கம், பதிவேற்றம் உள்ளிட்டவற்றை அது ஆய்வு செய்தது. நகரங்கள், முக்கியப் பகுதிகள், பொது போக்குவரத்து இடங்கள், போன்றவற்றில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் செயல்பாட்டை ஆய்வு செய்தது.

நகரப் பகுதிகளில் 350.3 கிமீ தொலைவிற்கு 2026 ஜூன் 1, 2 மற்றும் 4-ம் தேதிகளில் இச்சோதனையை நடத்தியது. ஜெய்பூரில் உள்ள இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் இது நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282764&reg=3&lang=1

***

SS/IR/KPG/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2283029) வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi