நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்பு

प्रविष्टि तिथि: 08 JUL 2026 7:25PM by PIB Chennai

மொத்தம் ரூ. 37,500 கோடி நிதி ஒதுக்கீட்டுடன், 2026 மே 13 அன்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட  நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், நிலக்கரி அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் மதிப்புக்கூட்டல் அதிகரிக்கப்படுகிறது, இறக்குமதி மீதான சார்பு குறைக்கப்படுகிறது, எரிசக்தி மற்றும் ரசாயனத் துறைகளில் இந்தியா மேலும்  தன்னிறைவை அடைவதற்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2026 ஜூன் 25 அன்று திட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2026 ஜூலை 7 அன்று தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க ஏதுவாக,  முன்மொழிவுக்கான கோரிக்கை வெளியிடப்பட்டது.

பங்குதாரர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும், திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து தெளிவுபடுத்தவும், அமைச்சகம் ஜூலை 20 அன்று விண்ணப்பத்திற்கு முந்தைய கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களும், இதர பங்குதாரர்களும் இதில்  கலந்துகொண்டு, தங்களது சந்தேகங்களுக்கான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி  செப்டம்பர் 7,  2026.

கூடுதல் தகவல்களுக்கு, நிலக்கரி அமைச்சகத்தின் இணையதளத்தை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282578&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2282656) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati