பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொச்சியில் பிரிக்ஸ் அமைப்பின் பெண் அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது

प्रविष्टि तिथि: 08 JUL 2026 6:33PM by PIB Chennai

இந்தியா தலைமையில், 2026 பிரிக்ஸ் அமைப்பின் பெண் அமைச்சர்கள் கூட்டம் இன்று கொச்சியில் தொடங்கியது. உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பெண்களுக்கு அதிகாரமளித்தல் நடவடிக்கைகளை மேம்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய, மீள்திறன் கொண்ட, நீடித்த வளர்ச்சிக்கான பகிரப்பட்ட உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பெண் அமைச்சர்கள், தூதுக்குழுத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம், 2026 ஜூலை 6-7 தேதிகளில் நடைபெற்ற பிரிக்ஸ் மகளிர் செயற்குழு கூட்டத்தின் தொடர் நடவடிக்கையாகும். பிரிக்ஸ் மகளிர் திட்டத்தின் கீழ் உள்ள முன்னுரிமை அம்சங்கள் குறித்து மூத்த அதிகாரிகள் விவாதித்தனர். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், மகளிர் தலைமையிலான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும், இந்த அமைச்சர்கள் கூட்டம் உத்திசார் வழிகாட்டுதலை வழங்கியது.

இதில் மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தொடக்கவுரையாற்றினார். மீள்திறன் கொண்ட பொருளாதார நடவடிக்கைகள், சமூகங்களை உருவாக்குவதில் மகளிர் தலைமைத்துவம் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் வலியுறுத்தினார். மேலும், இந்தியத் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெறும் இந்த கூட்டத்தில், "மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு, நிலைத்தன்மையைக் கட்டமைத்தல் " என்ற  கருப்பொருள் கீழ், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே வலுவான ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

4வது பிரிக்ஸ் பெண் அமைச்சர்கள் கூட்டத்தின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இதில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை அணைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொண்டது இதன் முக்கிய விளைவாகும். இது பிரிக்ஸ் மகளிர் சார்ந்த நடவடிக்கைகளில் நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.

இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இரண்டு செயல்திட்டங்களை பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வரவேற்றன.

பிரிக்ஸ் மகளிர் சிறந்த நடைமுறைகளின் டிஜிட்டல் களஞ்சியம். இது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் சிறந்த நடைமுறைகளையும், அனுபவங்களையும், ஆவணப்படுத்தும் ஒரு பகிரப்பட்ட அறிவுசார் தளமாகும். பிரிக்ஸ் மகளிர் டிஜிட்டல் திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல்கள். இது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் சமூகம் முழுவதும் நிறுவன கூட்டு நடவடிக்கைகள், டிஜிட்டல் கற்றல், திறன் மேம்பாட்டை விரிவுபடுத்துவதற்கான ஒரு செயல்திட்டமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282544&reg=3&lang=1

(Release ID: 2282544)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2282630) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam