குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் ஜூலை 9 அன்று ஒடிசாவில் பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 JUL 2026 3:39PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் ஜூலை 9 அன்று ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் பயணம் மேற்கொள்கிறார். அப்பயணத்தின் போது புவனேஷ்வரில் உள்ள ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடுக்கடலில் மீன்பிடிப்பதற்கான அங்கீகார கடிதத்தை வழங்குவதற்கான தேசிய அளவிலான நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்க உள்ளார். மேலும், ஒடிசா ஆழ்கடல் மீன்பிடி இயக்கம் ஆவணத்தையும் அவர் வெளியிட உள்ளார்.
பின்னர், புவனேஷ்வர் கோர்தாவில் உள்ள தேசிய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் கலந்து கொள்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282427®=3&lang=1
***
(Release ID 2282427)
SS/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2282560)
வருகையாளர் எண்ணிக்கை : 49