விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது – மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான்

இடுகை இடப்பட்ட நாள்: 08 JUL 2026 3:20PM by PIB Chennai

எல் நினோ தாக்கத்தால் நிலவும் தென்மேற்கு பருவமழையின் நிச்சயமற்ற சூழலுக்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரிவான தயார் நிலை நடவடிக்கைகள், தெளிவான உத்தி, வலுவான களப்பணிகள் மூலம் சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. சவால்கள் இருப்பினும், ஒட்டுமொத்த நிர்வாகமும் தயார் நிலைக்கு உட்படுத்தப்பட்டு பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஜூன் மாதத்தில்  33 சதவீதம் அளவிற்கு மழை குறைவாக பதிவான நிலையில்,  ஜூலை மாதத்தில் மழைப் பொழிவு மேம்பட்டு பற்றாக்குறை 24 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய வேளாண், விவசாய நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்.  நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக் காலங்களில் நல்ல மழை பெய்துள்ளதாகவும்  இதன் மூலம் மழைக் குறைவாக பதிவான மாவட்டங்களின் எண்ணிக்கை 262-லிருந்து 178-ஆக குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

புதுதில்லியில் நடைபெற்ற உயர்நிலைக்குழுக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திரு சௌகான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், ஜார்க்கண்ட், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நிலவும் சூழல்களை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டார். ஜூலை மாதத்தில் மழைப்பொழிவு மேலும் அதிகரிக்கும் என்றும் காரீப் பருவ விதைப்புப் பணிகள் விரைவு பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுவரை 350.85 லட்சம் ஹெக்டர் பரப்பளவில்  காரீப் பருவ விதைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறிய மத்திய அமைச்சர், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 91.95 லட்சம் ஹெக்டேர் குறைவாகும் என்று தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282422&reg=3&lang=1 

***

SS/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2282555) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Kannada , Malayalam